தற்போதய செய்திகள் :
Home » , » தேரரோடு சூடுபிடித்த தொலைக்காட்சி விவாதம் ஒரு பார்வை..

தேரரோடு சூடுபிடித்த தொலைக்காட்சி விவாதம் ஒரு பார்வை..

Written By Unknown on Wednesday, January 6, 2016 | 5:39 AM




-றிம்சி ஜலீல்-

நேற்று சரியாக 10.00 மணி இருக்கும் தேரரோடு விவாதம் அதுவும் ஒரு முஸ்லிம் அமைச்சர் சிங்கள பாசை கூட சரியாகத் தெரியாதவர் இவர் அங்கு போய் என்ன செய்யப் போகிறார் என்று மக்கள் மத்தியில் பல குழப்பம் மற்றும் விமர்சனங்கள் வேறு.


விவாதம் ஆரம்பமானது பாஹியங்கம ஆனந்த தேரர் முதலில் பேச ஆரம்பித்தார் வில்பத்து வரலாற்றுடன் ஆரம்பித்த அவர் வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
  
அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய அமைச்சர் ரிசாத் வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாக பதில் வழங்கினார் என்னால் நம்ப முடியவில்லை சிங்களம் தெரியாது என்று மக்கள் கூறிய அமைச்சரா..?? இவ்வாறு கதைக்கிறார் என்று ஒரே ஆச்சரியம்..!!

மீண்டும் வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக பாஹியங்கம ஆனந்த தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அத்துடன் 
அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார் பாஹியங்கம ஆனந்த தேரர்.

இக்குற்றச்சாட்டுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர் நான் குடு வியாபாரம் செய்வதாக நீங்கள் கூறுகி்ன்றீர்கள் இதுகுறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு உங்களுக்கு நான் சவால் விடுகிறேன் சும்மா பொய் கூறி மக்களைத் திசை திருப்ப வேண்டாம் என்றார்.

இவ்வாறு நேற்று இரவு பத்து மணி தொடக்கம் தனியார் தொலைக்காட்சியில் நடந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுடனான,நேரடி விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

மீண்டும் தொடர்ந்த 
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அரச ஆவணங்கள் மற்றும் நில அளவையியல் திணைக்களத்தின் ஆவணங்களை முன்வைத்து வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குல நிலமேனும் காடழிப்பு மேற்கொள்ளப்படவில்லை என  ஆதாரபூர்வமாக நிரூபித்தார்.

இதனையடுத்து குற்றச்சாட்டை மாற்றிய ஆனந்த தேரர், வில்பத்து வனாந்திரத்தை சுற்றிலும் சிங்களக் குடியிருப்புகளே இருந்ததாகவும், வரலாறு காலம் தொட்டு அப்பிரதேசம் சிங்களவர்களுக்கு உரித்தானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனந்த தேரரின் அந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆங்கிலேயர் காலம் தொட்டு தமிழ், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மன்னாரில் வாழ்ந்து வந்திருப்பது குறித்த ஆதாரங்களை  முன்வைத்தவுடன் விவாதத்தை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் இனவாத கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர்.

இதனையடுத்து குறித்த தனியார் தொலைக்காட்சியின் முகாமைத்துவத்தை தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் ஆர்.எப். அஷ்ரப் அலீ, பளளுவெவ அபுல்கலாம் ஆசாத், கலாநிதி றியாஸ், உள்ளிட்ட குழுவினர் தங்களது கடுமையான ஆட்சேபணையை தெரிவித்தாக நம்பகத் தகும் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் இனவாதக் கருத்துக்களுக்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்குறித்த நேரடி விவாத நிகழ்ச்சியில் இனியும் ஒரு வார்த்தை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராகவோ, மன்னாரில் அவர்களின் பூர்வீக உரிமைகளுக்கு எதிராகவோ இனவாதக் கருத்துக்களை வெளியிட்டால் நள்ளிரவுக்குள் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் பொதுமக்களால் முற்றுகையிடப்படும் என்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

இவ்வாறு தொடர்ந்தும்
 வில்பத்து விவகாரம் பற்றி தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் தாம் கட்டமைத்த பாரிய பொய்ப் பிரச்சாரத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தகர்த்தெரிந்தமை தொடர்பாக கடுமையான ஆத்திரத்துடன் ஆனந்த தேரர் தனது இனவாதக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் முன்வைத்தார்.

அத்துடன் முழுநாட்டு மக்களினதும் அவதானத்தை ஈர்த்திருந்த இந்த நேரடி நிகழ்ச்சியில் 
அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் என்பது சிங்களவர்களுக்கு ஒருபோதும் உரித்தானதாக இருக்கவில்லை என்றும் , அப்பிரதேசம் முழுக்க தமிழ், முஸ்லிம், கிறித்தவர்களின் பாரம்பரிய பூமி என்றும் பலமான பல கருத்துக்களை அமைச்சர் பதிவு செய்தது டீவி பார்த்துக் கொண்டிருந்த எமக்கு ஆச்சரியத்தை அளித்து.

நல்லிரவு 1.30 மணிவரைத் தொடர்ந்த இந்த விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு துணிச்சலை வெளிப்படுத்தியது சிங்கள தமிழ்  கிறித்தவ மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது என்று கூறும் அளவுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது..

றிம்சி ஜலீல்
மடலஸ்ஸ
கெகுணகொல்ல
குருநாகல்.

Share this article :

0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Tell us what you're thinking... !

Mountain View
Mountain View
 
Support :

Copyright © 2016. anbu.com - All Rights Reserved
Template Design by Creating Website Published by RIMSHI JALEEL