தற்போதய செய்திகள் :
Home » , , » பரீட்­சை எழுதச் சென்ற மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சிங்கள மாணவன் - பன்னவயில் நடந்தது என்ன?

பரீட்­சை எழுதச் சென்ற மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சிங்கள மாணவன் - பன்னவயில் நடந்தது என்ன?

Written By Unknown on Wednesday, January 6, 2016 | 5:39 AM




(Information Vedivelli MFM.Fazeer)


பர்தா, ஹிஜாப், நிகாப் அணிந்து செல்லும் பெண்­களை கேலி செய்­வது, அவர்­களின் ஆடை­களை பிடித்து இழுப்­பது, பள்­ளி­வா­சல்கள் மீது கல்­லெ­றி­வது, முஸ்­லிம்­களை வம்­புக்கு இழுப்­பது போன்ற நட­வ­டிக்­கைகள் ஊடாக ஆரம்­பித்த இன­வாதம் கடந்த காலங்­களில் முழு நாட்­டுக்கும் பாரிய பிரச்­சி­னை­யாக இருந்­ததை யாரும் அவ்­வ­ளவு சீக்­கிரம் மறந்­தி­ருக்க முடி­யாது.

இதன் முடிவு இறு­தியில் ஆட்­சியில் இருந்த அர­சாங்கம் ஒன்­றி­னையே மாற்­றி­ய­மைக்கும் நிர்ப்­பந்­தத்­துக்கு முஸ்­லிம்கள் உள்­ளிட்ட அனைத்து சமூ­கத்­தி­ன­ரையும் தள்­ளி­யது.

இந்த ஆண்டு தொடக்­கத்தில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர், பள்­ளி­வா­சல்கள் மீது கல்­லெ­றிதல், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத கருத்துப் பறி­மா­றல்கள் மற்றும் நட­வ­டிக்­கைகள் பெரிய அளவில் குறைந்­தாலும் அவை முற்­றாக ஓய­வில்லை. அவ்­வப்­போது இடம்­பெறும் பல சம்­ப­வங்கள் இவற்றை எமக்கு எடுத்துக் காட்­டு­கின்­றன.

இவற்றில் பல சம்­ப­வங்கள் தனிப்­பட்ட பிரச்­சினை, இரு குழுக்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை என சமா­தானம் சொல்­லப்­பட்ட போதும் அவற்றின் பின்னால் மறைந்­துள்ள இன­வாத, மத­வாத, பிர­தே­ச­வாத பிரச்­சி­னை­களை பேச பலர் அச்­சப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றா­ன­தொரு பிரச்­சினை கடந்த வாரம் குரு­ணாகல் மாவட்­டத்தின் கொபே­கன பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பன்­னவ பகு­தியில் பதி­வா­னது.

கடந்த வாரம் நிறை­வ­டைந்த கல்விப் பொதுத் தரா­தர சாத­ரண தரப்­ப­ரீட்சை எழுதச் சென்ற பன்­னவ பிர­தே­சத்தின் முஸ்லிம் மாணவ மாண­வியர் பரீட்சை நிலை­யத்தில் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் மற்றும் பன்­னவ, புபு­லிய எனும் அரு­க­ருகே இருக்கும் முஸ்லிம், சிங்­கள கிரா­மங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­களே இந்தக் கட்­டுரை எழு­தப்­பட முக்­கிய கார­ண­மாக அமைந்­தது.

உண்­மையில் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தரா­தர சாத­ரண தரப்­ப­ரீட்­சையின் ஆங்­கில பாடம் நடை­பெற்ற நாளன்று வழ­மை­போன்றே கொபே­கன பகு­தியில் உள்ள பிர­பல பாட­சாலை ஒன்றில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பரீட்சை நிலை­யத்­துக்கு பரீட்சை எழுத பன்­னவ முஸ்லிம் மத்­திய கல்­லூரி மாணவ மாண­வியர் சென்­றுள்­ளனர். குறித்த பரீட்சை நிலை­யத்­துக்கு பரீட்சை எழுத செல்லும் ஒரே முஸ்லிம் பாட­சாலை மாணவ மாண­வியர் இப்­பா­ட­சா­லையைச் சேர்ந்­த­வர்­களே.

இந் நிலையில் அன்­றைய தினம் ஆங்­கில பாடம் எழுதச் சென்ற முஸ்லிம் மாணவி ஒரு­வரின் கையைப் பிடித்து அங்­கி­ருந்த பெரும்­பான்மை இன மாண­வர்கள் சேட்டை செய்­ததால், அங்­கி­ருந்த அனைத்து முஸ்லிம் மாண­வி­யரும் பெரும் மன உளைச்­ச­லுக்கும் அச்­சத்­துக்கும் உள்­ளா­கி­யுள்­ளனர்.

இதனை விட பரீட்­சைக்குச் சென்ற இரு முஸ்லிம் மாண­வர்கள் மீது பெரும்­பான்மை இன மாண­வர்கள் பரீட்­சைக்கு முன்னர் கடு­மை­யான தாக்­கு­த­லையும் பரீட்சை மண்­டப பகு­தியில் வைத்து நடத்­தி­யுள்­ளனர்.

இந்த சம்­பவம் அன்­றைய தினம் பரீட்சை எழுதும் மன நிலையில் இருந்து முஸ்லிம் மாணவ மாண­வி­யரை முற்­றாக தூரப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் பெரும் மன உளைச்­ச­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 44 முஸ்லிம் மாணவ மாண­வியர் இந்த பரீட்சை நிலை­யத்தில் பரீட்சை எழு­திய நிலையில் அவர்கள் அனை­வ­ரி­னதும் மன நிலையை இந்த சம்­பவம் பெரிதும் பாதித்­துள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் நாம் பன்­னவ முஸ்லிம் மத்­திய கல்­லூரி அதிபர் மொஹம்மட் ஹாஸிமை தொடர்­பு­கொண்டு வின­வினோம். இதற்கு பதி­ல­ளித்த அவர் ' இவ்­வாறு ஒரு சம்­பவம் பதி­வா­னது உண்­மைதான்.

அது குறித்து எனது மாணவ மாண­வியர் என்­னிடம் முறை­யிட்­டனர். நான் உட­ன­டி­யாக கொபே­கன பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து மறு நாள் பரீட்சை நிலை­யத்­துக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

எனினும் மாண­வர்­களின் மன நிலையில் இந்த சம்­பவம் பாரிய தாக்­கத்தை எற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.' என்றார்.

இத­னை­ய­டுத்து விடயம் குறித்து கொபெ­கன பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­தி­ல­க­விடம் விடி­வெள்ளி விளக்கம் கோரி­யது.

' சம்­பவம் இடம்­பெற்­றமை உண்­மைதான். அது தொடர்பில் முறைப்­பாடு செய்­யப்­ப­டாத போதும் அதிபர் எனக்கு தந்த தக­வ­லுக்கு அமை­வாக நாம் அதன் பின்­ன­ரான பரீட்­சையின் போது பொலிஸ் பாது­காப்பை வழங்­கினோம்.

அத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களும் மாண­வர்கள் என்ற ரீதியில் பரீட்சை முடிந்­த­வுடன் அவர்­களை நாம் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து கடு­மை­யாக எச்­ச­ரிக்கை செய்து விடு­வித்தோம். இது ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான சம்­பவம். மாண­வர்கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை எந்த வகை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.' என தெரி­வித்தார்.

கடந்த காலங்­க­ளிலும் இவ்­வா­றான கசப்­பான அனு­ப­வங்­களை குறித்த பகு­தியின் பரீட்சை மத்­திய நிலை­யத்­துக்கு பரீட்சை எழுதச் செல்லும் மாணவ மாண­வியர் சந்­தித்­துள்­ள­தாக விடி­வெள்­ளிக்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமை­வாக, இவ்­வா­றான மாண­வர்­களை மன உளைச்­ச­லுக்கு உள்­ளாக்கும் செயற்­பா­டு­க­ளுக்­கான தீர்வு குறித்து பன்­னவ மத்­திய கல்­லூரி அதிபர் மொஹம்மட் ஹாஸிமை நாம் வின­வினோம்.

' உண்­மையில் இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து ஊருக்­குள்ளும் பிரச்­சி­னை­யான சூழல் ஏற்­பட்­டதால் முழு­மை­யான அவ­தா­னத்தை தனிப்­பட்ட ஒரு சம்­ப­வத்தில் மட்டும் செலுத்த அவ­காசம் இருக்­க­வில்லை.

எனினும் இந்த சம்­பவம் குறித்து வலயக் கல்விப் பணிப்­பா­ள­ருக்கும் பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கும் எழுத்து மூலம் அறி­விப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளேன். குறிப்­பாக எதிர்­கா­லத்தில் மூன்று நான்கு கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்பால் உள்ள அந்த பரீட்சை நிலை­யத்தை விட எமது பாட­சா­லை­யி­லேயே பரீட்சை நிலை­யத்தைப் பெற்றுக் கொள்­வது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அது குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கான முயற்­சி­களில் நாம் இறங்­கி­யுள்ளோம்.' என்றார்.

இந் நிலையில் தான் பன்­னவ, புபு­லிய கிரா­மங்­க­ளுக்கு இடை­யி­லான அல்­லது அவ்வூர் முஸ்லிம் சிங்­கள மக்­க­ளுக்கு இடை­யி­லான பதற்ற நிலை குறித்து கொபே­கன பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஜய­தி­ல­கவை வின­வினோம்.

' உண்­மையில் பன்­னவ பிர­தேச கோழிப் பண்னை வர்த்­தகர் ஒருவர் தனது லொறியில் ஊருக்குள் வரும் போது பாதையில் இருந்த சேறு அருகில் நின்­றி­ருந்த நபர் ஒருவர் மீது சிதறிச் சென்று விழுந்­துள்­ளது.

இதனைத் தொடர்ந்து லொறி செலுத்­துனர் மீது குறித்த பெரும்­பான்மை இன நபர் தூஷண வார்த்­தை­களால் திட்டித் தீர்த்­துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அன்­றைய தினம் அந்த கோழிப் பண்­னை­யுடன் தொடர்­பு­டைய ஒரு­வரை தாக்­கவும் சென்­றுள்ளார். இதன் போது தாக்கச் சென்ற நபர் மீது அங்­கி­ருந்­த­வர்கள் பதில் தாக்­குதல் நடத்தி விரட்டி அடித்­துள்­ளனர். அவர் வைத்­தி­ய­ச­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு தற்­போது வீடு திரும்­பி­யுள்ளார்.

இந் நிலையில் அது தொடர்பில் கிடைத்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக நம் விசா­ரணை செய்து சம்­பந்­தப்­பட்ட முஸ்லிம் வாலி­பரை கைது செய்­த­துடன் தற்­போது அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறு நாள் பாதையால் சென்று கொண்­டி­ருந்த இரு முஸ்லிம் இளை­ஞர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதனை மேற்­கொண்ட பெரும்­பான்மை இன இளை­ஞர்கள் நால்­வரை நாம் இனங்­கண்­டுள்ளோம். அவர்கள் தற்­போது தலை­ம­றை­வா­கி­யுள்­ளனர். அவர்­களை கைது செய்யத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம்.

இதனால் பிர­தே­சத்தில் முஸ்லிம் சிங்­கள மக்­க­ளி­டையே பதற்­ற­மான சூழல் நில­வி­னாலும் நாம் அவற்றை தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்ளோம்.

இரு ஊர் மத குரு­மார்­க­ளையும் பெரி­யார்­க­ளையும் சந்­தித்து அமை­தி­யான சூழல் நிலவ போதிய ஏற்­பா­டு­களை செய்­துள்ளோம்.

தற்­போது அமை­தி­யான சூழல் நில­வு­கின்­றது. உண்­மையில் இது இன­வாத, மத­வாத, பிர­தே­ச­வாத தாக்­குதல் கிடை­யாது. இது தனிப்­பட்ட கோபத்தின் பிர­தி­பலன். கண்­டிப்­பாக நாம் தேடி வரும் நால்­வ­ரையும் கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்­துவோம்.' என பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­தி­லக தெரி­வித்தார்.

எனினும் பிர­தேச வாசிகள் எமக்கு அளிக்கும் தக­வல்­களின் பிர­காரம் இந்த சம்­ப­வங்கள் மிகத் திட்­ட­மிட்­ட­தா­கவே தோன்­று­கின்­றது. ஏனெனில் தனிப்­பட்ட சம்­பவம் என பொலிஸார் கூறிய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு சட்ட ரீதி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தொழி­லுக்குச் சென்று திரும்பும் முஸ்­லிம்கள் அச்­சு­றுத்­தப்­பட்ட சம்­ப­வங்கள், 70 வயது முஸ்லிம் வயோ­திபர் ஒருவர் தாக்­கப்­பட்­டமை மேலும் இரு இளை­ஞர்கள் தாக்­கப்­பட்­டமை போன்ற விட­யங்கள் மிகத் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக இரவு வேளையில் முஸ்­லிம்­களை தாக்கும் செயற்­பா­டு­களில் பலர் ஈடு­பட்­ட­மை­யா­னது சில நாட்­க­ளாக அவர்­க­ளது அன்­றாட நட­வ­டிக்­கை­களைக் கூட பாதித்­தி­ருந்­தது.

இந் நிலையில் இந்த பிரச்­சினை இன்னும் முழு­மை­யாக தீர்க்­கப்­ப­ட­வில்லை என பன்­னவ பிர­தே­சத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் விடி­வெள்­ளி­யு­ட­னான உரை­யா­டலில் தெரி­வித்தார்.

பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள அதே சமயம் பெரும்­பான்­மை­யின சமயத் தலை­வர்கள் சமா­தானத் தூது­வர்­க­ளாக தம்மைக் காட்டிக் கொண்­டாலும் இடம்­பெற்ற சம்­ப­வத்­துக்­கான தீர்­வி­னையோ எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான கசப்­பான அனு­ப­வங்கள் நிகழ்­வதை தடுப்­ப­தற்­கான தீர்­வி­னையோ இது­வரை எவரும் முன்­வைக்­க­வில்லை எனவும் அவ்­வாறு ஒரு தீர்வு காணப்­பட்­டாலே பன்­னவ, புபு­லிய பிரச்­சினை அல்­லது சிங்­கள முஸ்லிம் பிரச்­சினை தீர்ந்­த­தாக ஏற்­றுக்­கொள்ள முடியும் என அந்த முக்­கி­யஸ்தர் விளக்­கினர்.

எது எப்­ப­டியோ பன்­னவ முஸ்­லிம்­க­ளுக்கு எது­வித அச்­சு­றுத்­தலும் ஏற்­ப­டாத வண்ணம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தாக தெரி­விக்கும் கொபே­கன பொலிஸார் இவ்­வா­றான பிரச்­சினை எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தன, குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்ன உள்ளிட்டோரின் அவதானத்துக்கும் உட்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

சிங்கள மக்களுடன் கலந்து வாழும் பிரதேசங்களில் இவ்வாறு அடிக்கடி ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களின் போது அவை விகாரமாவதை தடுப்பதுக்கு அல்லது மாற்று நடவடிக்கை குறித்து உடனடியாக ஆலோசனைகள் அவசியமாகின்றன. எனவே இது குறித்து முஸ்லிம் சமூக புத்தி ஜீவிகள் மற்றும் நலன் விரும்பிகள் உரிய கனவம் செலுத்த வேண்டும்.

இல்லையேல் எதிர்காலத்தில் இவ்வறான பிரச்சினைகள் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடும்.

Share this article :

0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Tell us what you're thinking... !

Mountain View
Mountain View
 
Support :

Copyright © 2016. anbu.com - All Rights Reserved
Template Design by Creating Website Published by RIMSHI JALEEL