தற்போதய செய்திகள் :
Home » » நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா?

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா?

Written By Unknown on Wednesday, January 6, 2016 | 1:07 AM





நிச்சயதார்த்தம் என்பது ஷரீஅத்திலும் சரி, மரபிலும் சரி திருமணம் அல்ல. அது திருமணத்திற்கான ‘முன் நிகழ்வு’ மட்டுமே ஆகும்.

திருமணமன நிச்சயதார்த்தம், திருமணம் ஆகிய இவ்விரு அம்சங்களையும் ஷரீஅத் தெளிவாக பிரித்து வைத்துள்ளது.

''நிச்சயதார்த்தம்'' என்பது எவ்வளவு பிரபலப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டாலும் அது ஓர் உறுதிப்பாட்டை வழங்குகிறது என்ற நிலையை விட்டு நகர்ந்து விடாது. நிச்சயதார்த்தம் எந்நிலையிலும் நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கு அப்பெண் மீது எவ்வித உறிமையையும் வழங்கி விடாது.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இன்னொருவர் நிச்சயிக்க முனைந்தால் அதனைத் தடுப்பதற்கே அன்றி, வேரெதற்காகவும் அல்ல.

ஒரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது:''உங்களில் எவரும் உங்களது சகோதரனுக்கு எதிராக (அவனுக்குப் பேசப்பட்ட பெண்ணை) நிச்சயதார்த்தம் செய்ய வேண்டாம்.'' (நூல்: புகாரி, முஸ்லிம்)

இதில் முக்கியமான ஒரு செய்தி என்னவெனில், திருமண ஒப்பந்தம் பூரணமாகும் வரையில் நிச்சயிக்கப்பட்ட பெண் அந்த ஆணுக்கு ‘அஜ்னபி’ ஆகும். ஒரு பெண் ''சட்டபூர்வமான உடன்படிக்கை'' இன்றி திருமண பந்தத்திற்குள் நுழையவே முடியாது.

ஏனெனில் உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம் ‘ஈஜாப்’ ‘கபூல்’ ஆகியவையாகும். ஈஜாபும், கபூலும் தெளிவாக வரையறுக்கப்பட்ட வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்பது ஷரீஅத்திலும் மரபிலும் வலியுறுத்தப்பட்டவை ஆகும். அதே சமயம் (நாணத்தின் காரணமாக) பெண்ணின் மவுனம் சம்மதமாக எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு.

ஓர் உண்மைச்சம்பவம் (படிப்பினை மற்றும் எச்சரிக்கைக்காக) :

சமீபத்தில், தமிழகத்திலுள்ள ஒர் ஊரில் ஒரு முஸ்லீம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடந்தபோது மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்தார். அதனால் தொலைபேசி மூலமாக அவருடன் தொடர்பு கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

நிச்சயதார்த்தம்தான் நடந்து விட்டதே! இனி அந்த பெண் தனக்கு மனைவியாக வரப்போகிறவள் தானே என்று - நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, ‘பெண்’ணுடன் தொலைபேசியில் பேச குடும்பத்தார்களை அனுகியபோது அவர்களும் மறுப்பேதுமின்றி அனுமதியளித்து விட்டனர்.

வெளிநாட்டிலிருந்து பேசிய மாப்பிள்ளை ‘எனக்கு ஒரு கார் தேவைப்படுகிறது – அதை வாங்குவதற்கு முக்கால்வாசி பணத்தை சேர்த்து விட்டேன் - மீதி தொகையை உன்னால் கொடுக்க முடியுமா?’ என்று தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அவர் உண்மையாகத்தான் கேட்டாரா அல்லது நகைச்சுவைக்காக கேட்டாரா என்பதை அல்லாஹ் தான் அறிவான்.

ஆனால், இந்த தொலைபேசி உரையாடலுக்குப்பின் தனக்கு ‘இந்த மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம்’ என்று அந்த நிச்சயிக்கப்பட்ட பெண் மறுத்துவிட்டார். குடும்பத்துப் பெரியவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அப்பெண் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

திருமண பத்திரிகை அச்சடித்து, வினியோகம் செய்யப்பட்டு விட்ட நிலையிலும் திருமணம் நின்று போனது. இந்த உண்மைச்சம்பவம் நிச்சயமாக அனைவருக்கும் ஓர் படிப்பினையாகும். ஆகவே பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Share this article :

0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Tell us what you're thinking... !

Mountain View
Mountain View
 
Support :

Copyright © 2016. anbu.com - All Rights Reserved
Template Design by Creating Website Published by RIMSHI JALEEL